ETV Bharat / state

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால், எதிர்கால சந்ததியினர் தண்ணீரை பாட்டில்களில் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படக்கூடும் என உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

chennai-hc
author img

By

Published : May 3, 2019, 8:33 AM IST

சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, மழை நீர் கடலில் வீணாகக் கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக் கோரி வி.பி.ஆர். மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (மே 2) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வருவாய்த் துறை ஆவணங்களில் ஏரி புறம்போக்கு நிலங்களை பயன்படுத்தி, ஏரி, குளங்களின் நீர்பிடிப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் மழை நீர் வீணாவதைத் தடுக்க முடியும் என்றும், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் வெள்ள சேதங்களுக்கு காரணமாக அமைவதாகவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் பொதுப்பணித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் அடையாறு, கூவம், பாக்கிங்ஹாம் கால்வாயிலிருந்த 10 ஆயிரத்து 347 ஆக்கிரமிப்புகளில் 4 ஆயிரத்து 161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடையாறு நதி ரூ.6.18 கோடி செலவில் துார்வாரப்பட்டு, அந்த நதிக்கரை ரூ.50 லட்சம் செலவில் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதேபோல் 56 பணிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், சென்னையில் உள்ள ஏரிகளில், ஆக்கிரமிப்பை அகற்ற அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளங்களைப் பாதுகாக்க ரூ.100 கோடி செலவில் குடி மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமைச் செயலர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்க உத்தரவிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை ஆறு மாதங்களுக்குள் அளவீடு செய்ய வேண்டும் எனவும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்தப் பணிகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், கடமை தவறும் அலுவலர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால், நமது முன்னோர்கள் ஆறு, குளம், ஏரிகளில் பார்த்த தண்ணீரை, எதிர்கால சந்ததியினர் குப்பியிலும் கேப்சூலிலும் (capsule) தான் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படக்கூடும் என வேதனை தெரிவித்தனர். மக்கள் வரிப்பணத்தை இலவசங்கள் வழங்க பயன்படுத்துவதை விடுத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மாநிலம் முழுவதும் கூடுதல் அணைகள் கட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

இயற்கையின் வர பிரசாதமான நீரை வீணாக்கினால், தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட நிலையை போல தமிழ்நாட்டிலும் தண்ணீர் இல்லா நாள் வரப்போவது வெகு தூரத்தில் இல்லை என கவலை தெரிவித்துள்ளனர். இதேபோல் மற்றொரு வழக்கில், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை அடையாளம் காண சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Intro:Body:

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால், எதிர்கால சந்ததியினர் தண்ணீரை பாத்திரங்களில் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படக்கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, மழை நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக் கோரி வி.பி.ஆர் மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது..

அப்போது,  வருவாய் துறை ஆவணங்களில் ஏரிபுறம்போக்கு என கூறப்படும் நிலங்களை பயன்படுத்தி,

ஏரி மற்றும் குளங்களின் நீர்பிடிப்பு பகுதிகளை விரிவு படுத்துவதன் மூலம் மழை நீர் வீணாவதை தடுக்க முடியும் எனவும், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் வெள்ள சேதங்களுக்கு காரணமாக அமைவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது

இந்த வழக்கில் பொதுபணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,

 சென்னையில் அடையாறு, கூவம் மற்றும் பாக்கிங்ஹாம் கால்வாயில் இருந்த 10,347 ஆக்கிரமிப்புகளில் 4161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடையாறு நதி 6.18 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளதோடு, அடையாறு நதிக் கரை 50 லட்சம் செலவில் பலப்படுத்த பட்டுள்ளதாகவும், இதே போல 56 பணிகளுக்கு 555 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது,

அதே போல, சென்னையில் உள்ள ஏரிகளில், ஆக்கிரமிப்பை அகற்ற அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் ஏரி குளங்களை பாதுகாக்க 100 கோடி ரூபாய் செலவில் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,

மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிட்டனர்.

மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், நீர் வழி தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்ய வேண்டும் என்றும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த பணிகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கடமை தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து, நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால், நமது முன்னோர்கள் ஆறு,குளம்

மற்றும் ஏரிகளில் பார்த்த தண்ணீரை, எதிர்கால சந்ததியினர் குப்பியிலும் கேப்சூலிலும் (capsule) தான் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படக் கூடும் என வேதனை தெரிவித்தனர்.

 மக்கள் வரிப்பணத்தை இலவசங்கள் வழங்க பயன்படுத்துவதை விடுத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மாநிலம் முழுதும் கூடுதல் அணைகள் கட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

இயற்கையின் வர பிரசாதமான நீரை  வீணாக்கினால், தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேப் டவுன் நகருக்கு ஏற்பட்ட நிலையை போல தமிழகத்திலும் தண்ணீர் இல்லா நாள் வரப்போவது வெகு தூரத்தில் இல்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

இதே போல மற்றொரு வழக்கில், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை அடையாளம் காண சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.