ETV Bharat / state

லண்டனை விட சென்னையில் அதிக சிசிடிவி கேமராக்கள் - கணக்கெடுப்பில் தகவல்

லண்டன், பெயிஜிங் ஆகிய நகரங்களை காட்டிலும் சென்னையில் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெற்கு ஆசிய இதழியல் கணக்கெடுப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.

சிசிடிவி கேமராக்கள்
சிசிடிவி கேமராக்கள்
author img

By

Published : Jan 4, 2021, 1:22 PM IST

சென்னை: உலகிலேயே ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அதிக சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் உள்ள நகரங்களில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அதிக சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ள நகரம் எது என்பது குறித்து தெற்கு ஆசிய இதழியல் கணக்கெடுப்பு ஒன்று நடத்தியது.

சென்னை, ஹைதரபாத், பெய்ஜிங், லண்டன் உள்ளிட்ட 130 முக்கிய பெருநகரங்களில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் சென்னையில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, நகரங்களில் பட்டியிலில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்ததாக ஹைதராபாத்தில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 480 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சீனா நாட்டின் ஹர்பின் நகரில் 411 சிசிடிவி கேமராக்களும், லண்டனில் 399 சிடிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக சென்னை முழுவதிலும் 2 லட்சத்து 70 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் ஹைதராபாத் நகரத்தில் 3 லட்சம் கேமராக்களும், பெய்ஜிங்கில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

முந்தைய காலத்தில் சென்னையில் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்கு பின், காவல் துறையினர் குற்றவாளிகளை கண்டறிய நீண்ட நாள்களாகும். இதனாலேயே பெரும்பாலான வழக்குகள் துப்பு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும்.

ஆனால் ஏ.கே விஸ்வ நாதன் சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றப் பின்னர், மூன்றாம் கண் என்ற திட்டத்தின் கீழ் சென்னை முழுவதிலும் சுமார் 2.7 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அதன் பின்னர் குற்றங்கள் நடந்தால் முதலாவதாக காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து உடனடியாக குற்றவாளிகளை பிடித்தனர்.

இதனால் சென்னையில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 60 செயின் பறிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிடிபட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை அதிகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திரையரங்குகளில் 100% இருக்கை - அரசு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.