சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஷார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி வைஷ்ணவ்(24) என்பவரை சுங்கத் துறையினர் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
உடமைகளில் எதுவுமில்லாததால் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். சோதனையில் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடமிருந்த 20 லட்சம் மதிப்புள்ள 615 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கத்தை கடத்தி வந்த வைஷ்ணவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்!