ETV Bharat / state

சென்னையில் 220 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்ற இரண்டு பேர் கைது!

சென்னை: எம்.ஜி.ஆர் நகர் மற்றும் நெசப்பாக்கம் சந்திப்பு அருகே, 220 கிலோ கஞ்சாவை காரில் கடத்திச் சென்ற 2 பேரை, காவல் துறையினர் கைது செய்தனர். பின் அவர்களிடமிருந்து கார் மற்றும் செல்ஃபோன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தியவர்கள்
கஞ்சா கடத்தியவர்கள்
author img

By

Published : Feb 24, 2021, 7:43 AM IST

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" மூலம், கஞ்சா மற்றும் போதை பொருள்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ராஜலட்சுமி மற்றும் அசோக் நகர் உதவி ஆணையர் மேற்பார்வையில், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று எம்.ஜி.ஆர் நகர் மற்றும் நெசப்பாக்கம் சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அவ்வழியே வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட (Honda Amaze) காரை நிறுத்தி விசாரணை செய்தனர்.

காரில் வந்த 2 நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், காரை சோதனை செய்தனர். அப்போது, அதில் 200 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், காரில் கஞ்சா கடத்தி வந்த புழல் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் (49), செங்குன்றத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (40) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின் அவர்களிடமிருந்து, ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 220 கிலோ எடை கொண்ட கஞ்சா, குற்றச்செயலுக்கு பயன்படுத்திய கார், 2 செல்ஃபோன்கள் மற்றும் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அவர்களிடம் விசாரணை மேர்க்கோண்ட பின்னர், 2 குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உயர் ரக மதுபானங்களை கொள்ளையடிக்க முயற்சி - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.