ETV Bharat / state

ஈசிஆரில் கணவன், மனைவியை மாற்றிக் கொள்ளும் மது, மாது விருந்து.. பலே கும்பல் சிக்கியது எப்படி? - State Crime news in tamil

Chennai ECR couple swap party: ஈ.சி.ஆர்.பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களில் கணவன், மனைவியை மாற்றிக் கொள்ளும் விபரீத சம்பவம், சிங்கில்ஸ்களை சமூக வலைத்தளம் மூலம் தூண்டில் போட்டு இழுக்கும் கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.

chennai ecr private villa couple swap party 8 person arrest
ஈ.சி.ஆர்.பண்ணை வீட்டில் கணவன், மனைவியை மாற்றிக் கொள்ளும் விபரீத பார்ட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 3:47 PM IST

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, பனையூரில் ஒரு பண்ணை வீட்டில் கணவன், மனைவி எனக் கூறி பார்ட்டி செய்யப் போவதாக ஆன்லைன் வாயிலாக நீச்சல் குளத்தோடு சேர்ந்த வீட்டை சனி மற்றும் ஞாயிறு (நவ.4, நவ.5) இரண்டு நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

சனிக்கிழமை (நவ.4) கணவன், மனைவி எனக் கூறிக் கொண்டு 8 போலி தம்பதிகளும், அவர்களுடன் வயதான சிங்கிள்ஸ் 10 பேரும் வந்துள்ளனர். சனிக்கிழமை பண்ணை வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் இசைக்கவிட்டு அரை நிர்வாண ஆடைகளுடன் பெண்கள் குத்தாட்டம், மது, கஞ்சா, ஜூக்கா எனப் போதையில் மிதந்து ஆட்டம் போட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.

சனிக்கிழமை இரவு பணம் கொடுத்து வந்த சிங்கிள்ஸ் அனைவரும் சென்று விட, ஞாயிற்றுக்கிழமை 7 சிங்கிள்ஸ் புதிதாக வந்துள்ளனர். வார இறுதி நாளில் மது, போதைப் பொருள், பெண்கள் எனக் குத்தாட்டம் ஆடிய சம்பவம் குறித்த தகவல் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுக்குக் கிடைத்துள்ளது.

காவல் துறையினர் உடனடியாக பனையூர் பண்ணை வீட்டிற்கு விரைந்தனர். கதவைத் தட்டச் சென்ற காவலர்களின் காதில் குத்து பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. கதவை ஓங்கித் தட்டியதும் கதவை ஆண் நபர் ஒருவர் திறந்தார். காக்கி உடையைப் பார்த்த உடன் பெண்கள் அரை குறை ஆடையுடன் அறையில் ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர்.

கையும் களவுமாக 8 பெண்கள், 15 ஆண்கள் சிக்கிக் கொண்டனர். அப்படியே. பண்ணை வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளேயே வைத்துக் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(45) அவரது மனைவி இருவரும் சேர்ந்து கடந்த 2018ம் ஆண்டு முதல் முகநூல் பக்கத்தில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கி அதிலிருந்து real married swap party couples என்ற பக்கத்தை உருவாக்கியுள்ளனர். அதில், சிங்கிள்க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி முதல் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம், பிறகு நடனம், மது விருந்து பார்ட்டி, நீச்சல் குளத்தில் உறவு என விளம்பரம் செய்து சிங்கிள்ஸ் இன்பாக்ஸ் வரவும் எனப் போட்டு விட்டு அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தி பெண்களை வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

ஒரு நபருக்கு மது, மாது விருந்திற்கு ரூபாய் 13,000 முதல் ரூபாய் 20,000 பணம் வசூலித்து பார்ட்டி என்ற பெயரில் கணவன், மனைவிகளை மாற்றிக் கொண்டு குழுவாக உடலுறவு கொண்டு பணம் பறித்து வந்துள்ளனர். அதில், கணவன், மனைவியாக வந்திருந்த சிலர் வறுமையின் காரணமாக, குடும்ப சூழ்நிலையினால் இந்த தொழிலில் வந்து விட்டதாகக் கண்ணீர் விட்டுள்ளனர்.

இந்த பார்ட்டிக்கு மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி எனப் பல மாவட்டங்களிலிருந்து தம்பதிகள் வந்திருந்தனர். வீடுகளுக்குத் தெரியாமல் மனைவிகளிடம் பொய் சொல்லிவிட்டு வந்திருந்த ஆண்கள் செய்வதறியாது திகைத்துப் போயினர்.

காவல்துறையினர் அவர்களது வீட்டிற்கு தெரியபடுத்தி உறவினர்களை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதே போல், 8 பெண்களையும் அனுப்பி வைத்தனர். 8 பெண்களின் கணவன் என கூறிய நபர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட ஆணுறைகள், பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள், மதுபாட்டில்கள், சிறிய அளவில் கஞ்சா, ஹூக்கா போன்றவற்றை பறிமுதல் செய்துனர்.

காவல்துறையில் சிக்கிக் கொண்டால் பர்த்டே பார்ட்டி என கூறி அதற்கு பிறந்தநாள் இருக்கும் ஒரு நபரை உடன் வைத்துக் கொண்டு நூதன முறையில் 5 ஆண்டுகளாக விபச்சார தொழிலில் கொடி கட்டி பறந்துள்ளதனர் இந்த கோயம்புத்தூர் தம்பதி. பின்னர், 8 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். மேலும் முகநூல் பக்கத்தை முடக்க உள்ளனர்.

வார இறுதி நாட்களில் ஈ.சி.ஆர்.பண்ணை வீட்டில், இது போன்ற பல விதங்களில் விபச்சாரம் நடந்து வருவதாகவும், ஆன்லைன் விளம்பரம் செய்து மனைவிகளை மாற்றிக் கொள்வது, இளைஞர்களை சீரழிப்பது மிகப்பெரிய சமூக சீர்கேட்டில் செல்லும் என்பதால் காவல்துறையினர் முறையான அனுமதியோடு தான் பண்ணை வீடுகள் செயல்படுகிறதா? அங்கு நடக்கும் சட்டவிரோத செயல்கள கண்காணிக்கப்படுகிறதா? என கண்காணித்து அனுமதியில்லாத பண்ணை வீடுகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு பயிற்சி தருவதாகக் கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை...! நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.