ETV Bharat / state

மாணவர்களிடம் போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது! - chennai

சென்னை: முகப்பேரில் போதை மாத்திரை விற்ற வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 3.75 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போதை மாத்திரை விற்கும் நபர்
author img

By

Published : Apr 21, 2019, 2:19 PM IST

சென்னை முகப்பேர் மேற்கு பகுதி நொளம்பூர் காவல் நிலையம் அருகில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஸ்டாம்ப் போன்றவைகள் கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மாணவர்கள் போன்று வேடமிட்டு, போதை பொருட்கள் விற்பதாக தகவல் வந்த இடத்தில் காத்திருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு போதைப்பொருட்களை விற்க இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

இதனையடுத்து அந்த வாலிபரை போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சரத் (எ) சரவணன் என்பது தெரியவந்தது. மேலும், போதை மருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த நபரை அயப்பாக்கத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:முகப்பேரில் போதை மாத்திரை போதை ஸ்டாம்ப் விற்ற வாலிபர் கைது அவரிடமிருந்து 3.75 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்.

Body:சென்னை முகப்பேர் மேற்கு பகுதி நொளம்பூர் காவல் நிலையம் அருகில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஸ்டாம்ப் போன்றவைகள் கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப் பொருட்களை வாங்க மாணவர்களைப் போல வேடமிட்டு அதிகாரிகள் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதிக்கு போதைப் பொருட்கள் விற்க ஒரு வாலிபர் வந்துள்ளார்.அவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சரத் (எ) சரவணன் என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 3.75 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை கைப்பற்றினர்.

1.LSD STAMP 5 nos -0.510 gms
2.MDMA Tablet 23 nos -12.360 gms
3.Hashish 4.830 gms

போதை கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த நபரை அயப்பாக்கத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற விற்பனையில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் எனவும் இவர்களுக்கு எங்கிருந்து வினியோகம் செய்யப்படுகிறது என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:மேலும் இதுபோன்ற விற்பனையில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் எனவும் இவர்களுக்கு எங்கிருந்து வினியோகம் செய்யப்படுகிறது என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.