ETV Bharat / state

சென்னையில் அபின் சப்ளை செய்த இருவர் கைது - Chennai drug Dealer arrested

சென்னை: பூக்கடைப் பகுதியில் அபின் சப்ளையில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

Drugs Sezied  சென்னை அபின் விற்றவர் கைது  பூக்கடை அபின் விற்றவர் கைது  போதை பொருள் பறிமுதல்  Chennai Abin soldier arrested  Pookkadai Abin soldier arrested
Chennai drug Dealer arrested
author img

By

Published : Apr 16, 2020, 2:41 PM IST

கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்துவருகிறது. இதனால், அன்றாடத் தேவையான பால், மளிகைப் பொருள்கள், காய்கறிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கடைகள் தவிர வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபான கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியவை செயல்பட அரசு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், மதுவிற்கு அடிமையான சிலர் மது கிடைக்காததால் வார்னிஷ், சானிடைசர், ஒயிட்னர் உள்ளிட்டவைகளைக் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் விரக்தியில் தற்கொலையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த சப்ளையர்கள் போதைக்கு அடிமையாக இருக்கும் நபர்களுக்கு விலை உயர்ந்த போதைப்பொருள்களைக் கூடுதல் விலைக்கு சப்ளை செய்துவருகின்றனர்.

அந்த வகையில், சென்னை பூக்கடை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விலை உயர்ந்த போதைப்பொருள்களைப் பொதுமக்களுக்குச் சப்ளை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் பதுக்கிவைத்து அபின் போதைப்பொருளை சப்ளை செய்துவந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அபின் சப்ளையில் ஈடுபட்ட தினேஷ், நரேஷ் ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்த சுமார் 150 கிராம் அபின் பறிமுதல்செய்யப்பட்டது.

இதையும் படிங்க:தருமபுரியில் போதைப்பொருள் விற்ற கடைக்குச் சீல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.