ETV Bharat / state

தேவைக்கேற்ப வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர்: சென்னை குடிநீர் வழங்கல் வாரியம்

சென்னை: குடிநீர் விநியோகத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் தேவையெனில் கொண்டுவரப்படும் என சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

தேவைக்கேற்ப வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர்

author img

By

Published : Apr 9, 2021, 7:15 PM IST

சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்படும். 2020 டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் இருப்பு நல்ல அளவில் உள்ளது.

வழக்கமாக சென்னையில் உள்ள ஐந்து மெட்ரோ ஏரிகளிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படும். பின்னர் ஏரிகளில் நீர் இருப்பு குறையும்போது, நிலத்தடி நீர் உதவும். இதையும் மீறி கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போது கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், "சென்னை மெட்ரோ ஏரிகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது. இதை தவிர இரண்டு உப்பு நீக்கும் ஆலையிலிருந்து குடிநீர் பெற்று வருகிறோம். எனவே இந்த வருடத்துக்கு தேவையான அளவு நீர் இருப்பு உள்ளது. எனினும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தண்ணீர் தேவைப்பட்டால் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்குத் தண்ணீர் நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.