இரவு நேர ஊரடங்கால் சென்னைவாசிகள் இரவு நேரங்களில் வெளியே வர முடியாததை கருத்தில் கொண்டு தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், பகல் நேரங்களில் மக்கள் சமூக இடைவெளியுடன் தங்களது குடங்களில் குடிநீரை நிரப்பிக்கொள்ளலாம் என வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
"தற்போது 500 க்கும் மேற்பட்ட ஒப்பந்த லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் விநியோகம் அத்தியாவசியம் என்பதால், இரவு நேரங்களில் விநியோகம் செய்ய வாரியத்திற்கு உரிமை உண்டு. இதனால் சென்னைவாசிகள் பயமின்றி வாரியத்தை தொடர்பு கொண்டு குடிநீரை பெறலாம்" என்று வாரியத்தின் செயற்பொறியாளர் ஒருவர் கூறினார்.
கரோனா முன்னேற்பட்டை பற்றி பேசிய அவர் "வாரிய் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், தொட்டியில் தண்ணீர் நிரப்பும்போது அல்லது நுகர்வோரின் குடங்களிள் நீர் நிரப்பும்போதும் கைகளில் கையுறை அணிய அறிவுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நீர் நிரப்பும் பொது கட்டாயம் கரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.