ETV Bharat / state

நிலத்தடி நீரை உறிஞ்ச தயாராகும் சென்னை குடிநீர் வாரியம்!

author img

By

Published : Jun 23, 2021, 6:59 AM IST

சென்னையில் உள்ள மெட்ரோ ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருவதால், சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் நிலத்தடி நீரை எடுப்பதற்குத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை குடிநீர் வாரியம்
சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கு ஐந்து ஏரிகளிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையினால் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிந்தன. எனினும், கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் நீரின் இருப்பு பாதியாக குறைந்துள்ளது.

அதாவது, கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் 10,859 மில்லியன் கியூபிக் அடியாக இருந்த மொத்த நீர் இருப்பு தற்போது 6,553 கன அடியாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், இந்த நீர் இருப்பை வைத்து குடிநீர் பஞ்சம் வராமல் தடுக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையை நம்பும் சென்னை குடிநீர் வாரியம்

மேலும், வடகிழக்குப் பருவமழை நல்ல மழையைக் கொடுத்தால்தான் குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து செய்ய முடியும். வடகிழக்குப் பருவமழை காலங்களில் மழைப்பொழிவு இல்லையெனில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் எனப் பேசப்படுகிறது.

இது குறித்து ஏரிகளை கண்காணிக்கும் பொதுப்பணித்துறை அலுவலர் கூறுகையில், "ஏற்கெனவே பூண்டி ஏரி வறண்ட நிலைக்கு வந்ததால், ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணா நதி நீரில் 1 அல்லது 2 டிஎம்சி பூண்டி அணைக்கு கிடைத்தால் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவாது. எனினும், கிருஷ்ணா நதி நீர் இந்த அளவுக்கு கிடைப்பது சந்தேகம்தான்" எனக் கூறினார்.

ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர்

இது குறித்து சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலர் கூறுகையில் "தற்போது ஏரிகளில் உள்ள மொத்த நீர் இருப்பு போதுமானது என்றாலும், மற்ற நீர் ஆதாரங்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டும் ஏரிகளில் நீர் இருப்பு குறையும்போது விவசாய ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் பெற்று குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு, இந்த ஆண்டு வராது என நம்பிக்கைத் தெரிவித்தார். தற்போது சென்னைவாசிகளுக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அளவைக் குறைக்க தற்போதைக்குத் திட்டம் இல்லை'' எனக் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி(ஜூன் 22) மொத்த நீர் இருப்பு அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 2,666 மில்லியன் கியூபிக் அடியாகவும், குறைந்தபட்சமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் 234 மில்லியன் கியூபிக் அடியாகவும் உள்ளது. புழல் ஏரியில் 2,664 மில்லியன் கியூபிக் அடியாகவும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மில்லியன் கியூபிக் அடியாகவும் உள்ளது.

சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்போதெல்லாம் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கப்படும். மேலும், வீராணம் ஏரியிலிருந்து குழாய் வழியாக நீர் கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் விஜய் வீட்டு முன்பு ரசிகர்கள் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.