ETV Bharat / state

பிரசவ கால இறப்பு விகிதம் அதிகரிப்பு - டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு - Chennai Maternal Mortality Rate Increases

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ கால இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரசவகால இறப்பு விகிதம் அதிகரிப்பு என குற்றச்சாட்டு
பிரசவகால இறப்பு விகிதம் அதிகரிப்பு என குற்றச்சாட்டு
author img

By

Published : Jan 28, 2020, 10:20 PM IST

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மாநில செயலாளர் சாந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில்,

பிரசவ கால தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஆனால் அந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. தமிழ்நாட்டில் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் தலைநகர் சென்னையிலேயே அதிகரித்துள்ளது. மேலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவமனைகளும் அதிகரித்துவருகிறது.

பிரசவகால இறப்பு விகிதம் அதிகரிப்பு என குற்றச்சாட்டு

பிரசவ கால உயிரிழப்புகளை குறைக்க அறுவை அரங்கம் , ரத்த சேமிப்பு வங்கி, மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகளுக்கான மருத்துவர்கள் 24 மணி நேரம் இருந்தால் மட்டுமே பிரசவம் பார்க்கப்பட வேண்டும். கர்ப்பிணி பெண்களின் வசிப்பிடம் அருகிலேயே மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை இருந்தாலும் அவர்கள் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் போதுமான மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. மகப்பேறு மருத்துவர்கள் 48 மணி நேரம் பணி செய்ய வலியுறுத்தப்படுவதால் அவர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வேறு சில நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. ஆகவே உடனடியாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையும் படிங்க:
சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா: மருந்து தயார்... இந்தியாவிலிருந்து கிளம்பும் போதி தர்மர்
!

Intro:தமிழகத்தில் பிரசவகால இறப்பு விகிதம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகரிப்பு

Body:சென்னை,
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ கால இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மாநில செயலாளர் சாந்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிரசவகால தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஆனால் வந்த நடவடிக்கையால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.

தமிழகத்தில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் வணக்கம் தலைநகர் சென்னையிலேயே மாநில சராசரியை விட அதிகமாக உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் சென்னையில் இருந்தாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க கட்டாயப்படுத்துவதால் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.

பிரசவகால மரணங்களை குறைக்க அறுவை அரங்கம் ,ரத்த சேமிப்பு வங்கி,மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள், மயக்க மருத்துவர்களுடன் ஊழியர்களும் 24 மணி நேரம் இருந்தால் மட்டுமே பிரசவம் பார்க்கப் படவேண்டும்.

கர்ப்பிணி பெண்களின் வசிப்பிடம் அருகிலேயே மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் இருந்தாலும் பிரசவத்திற்கு வரும் தாய்மார்களை அங்கு அனுமதிப்பதில்லை. அவர்களை தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டாயப் படுத்தி அனுப்பி வைக்கின்றனர். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் கர்ப்பிணி தாய்மார்கள் இறக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

தமிழகத்தில் போதுமான மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. மகப்பேறு மருத்துவர்கள் 48 மணி நேரம் பணி செய்ய வலியுறுத்த படுவதால் அவர்கள் மன உளைச்சல் அடைகின்றனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. வேறு சில நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. இது இந்த நோய் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை. இத்தகைய தொற்று ஏற்பட்டவர்கள் இதர நோயாளிகளுக்கு சிகிச்சை பெறும் மருத்துவமனையில் அனுமதிக்கும் வகையில் திட்டமிடுவது சரியல்ல. பிறர் நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட இது வழிவகுக்கும். எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை தனி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.