சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே பக்கவாட்டில் உள்ள சர்வீஸ் சாலையில் சில இளைஞர்கள் 4ஆம் தேதி இரவு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அவ்வழியே பணி முடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற ஆதம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ்(54) என்பவருக்கு வழிவிடாமல் சாலையிலேயே மது குடித்து அமர்க்களம் செய்துள்ளனர்.
ஹாரன் அடித்தும் நகராத அவர்கள் பீர் பாட்டிலால் உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்துவிட்டு இருசக்கர வாகனத்தின் சாவி, செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, ரத்தம் கொட்ட கொட்ட உதவி ஆய்வாளர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அதனையடுத்து அவரது தலையில் 10 தையல், இடது கண் புருவத்தின் அருகே 3 தையல் போடப்பட்டது.
பின்னர், இது குறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 341, 294(b), 324, 332, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போதை ஆசாமிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மோகன்தாஸை தாக்கியது ஆலந்தூரை சேர்ந்த 162 வட்ட இளைஞரணி திமுக துணை அமைப்பாளர் வினோத் தலைமையிலான கும்பல் என தெரியவந்தது.
அதனடிப்படையில் திமுக பிரமுகர் வினோத்குமார்(30), அஜித்குமார்(23) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து தலைமறைவாக உள்ள நபர்களையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: