ETV Bharat / state

ஸ்டாலினை பாராட்டிய திருமாவளவன்!

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

thirumavalavan
author img

By

Published : Nov 12, 2019, 2:59 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகள் தீவிரமாகச் செயலாற்றிவருகின்றன. அதேபோன்று அதிமுக உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிவருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக விசிக சார்பில் சந்தித்துப் பேசினோம். திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விசிக வரவேற்கிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக்கையை எந்தக் கட்சிகளும் எந்த மாநிலமும் முன்னெடுக்கவில்லை. அதனடிப்படையில், இந்த இடஒதுக்கீடு கோரிக்கையை திமுக முன்வைப்பதின் மூலம் சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையை திமுக வெளிப்படுத்தியுள்ளது.

அனைத்தையும் தனியார்மயமாக்கி பாஜக அரசு ஒடுக்க நினைக்கிறது. ஆனால், சமூக நீதிக்கான குரல் மீண்டும் அறிவாலயத்திலிருந்து ஓங்கி ஒலிக்கிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதையும் திமுக முன்னிறுத்தியுள்ளது. அதையும் விசிக சார்பில் பாராட்டுகின்றோம்.

திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. இது தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இடையில் உள்ளாட்சித் தேர்தல் வந்தால் திமுக கூட்டணியில் போட்டியிடுவோம்" என்று தெரிவித்தார்.

Intro:Body:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது விசிக எம்.பி ரவிகுமார் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக விசிக சார்பில் சந்தித்து பேசினோம். குறிப்பாக திமுக பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் வரவேற்கும் விதமாக சிறப்பாக அமைந்திருந்தன.

ராஜ மன்னா குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்கிற வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது வரவேற்கதக்கது. அதுபோல பிற்படுத்தப்பட்டோர்கான இடஒதுக்கீடு 50% ஆக உயர்த்த வேண்டும் என்று எந்த மாநிலத்திலும் எந்த கடசியும் இந்த குரலை உயர்த்தவில்லை. இந்த நிலையில் திமுக சார்பில் அந்த இடஒதுக்கீடை உயர்ந்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைப்பதின் மூலம் சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையை திமுக வெளிபடுத்தியுள்ளது.

அனைத்தையும் தனியார் மையம் ஆக்கி பிஜேபி அரசு ஒடுக்க நினைக்கின்றது. இந்நிலையில் சமூக நீதிக்கான குரல் மீண்டும் அறிவாலயத்தில் இருந்து ஓங்கி ஒலிக்கிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதையும் திமுக முன்னிறுத்தி உள்ளது. அதையும் விசிக சார்பில் பாராட்டுகின்றோம்.

திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. இது தொடர்ந்து சட்ட மன்ற தேர்தல் வரை தொடரும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. இடையில் உள்ளாட்சி தேர்தல் வந்தால் திமுக கூட்டணியில் போட்டியிடுவோம்.

மதுரை மேலவளவு படுகொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்,
திட்டமிட்டு சாதி, மதத்தின் பெயரால் நடைப்பெறும் கொலைகள் செய்யும் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட மாட்டார் என முதல்வர் எங்களிடம் நேரில் கூறியிருந்தார். ஆளுநரை சந்தித்து பேசியபோது இதே கருத்துதான் கூறினார். ஆனால் சாதியின் பெயரால் ஒரு கொடூர கொலை செய்த கொலையாளிகள் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்று தெரியவில்லை.இது குறித்து சட்ட வல்லுனர்கள் உடன் கூடி பேசி உரிய நேரத்தில் உரிய முடிவு எடுப்போம் என தெரிவித்தார்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.