ETV Bharat / state

குற்றச்செயல்களை தடுக்க வீதி, வீதியாக நடந்தே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் துணை ஆணையர்! - அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர்

சென்னை: அம்பத்தூர் பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்க வீதி,வீதியாக நடந்தே சென்று துணை ஆணையர் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Breaking News
author img

By

Published : Oct 29, 2020, 2:59 PM IST

சென்னை அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்தியன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக, நள்ளிரவில் காவலர்களின் தொடர் ரோந்து சுற்றிவருகின்றனர்.

அதேபோல் நாள்தோறும் நடைபெற்று வரும் செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, சைபர் கிரைம் போன்ற குற்றங்களை தடுக்க தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமாக சென்று அங்கு மக்கள் அதிகம் கூடும் பகுதியில் வீதி, வீதியாக நடந்தே சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

அந்த வகையில் திருமுல்லைவாயில் காவல் நிலைய பகுதியில் பொதுமக்களை சந்தித்த துணை ஆணையர் தீபா சத்தியன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் குற்றச் செயல்களை தடுக்கும் வழிமுறைகள், முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

குற்றச்செயல்களை தடுக்க வீதி, வீதியாக நடந்தே சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் துணை ஆணையர்!

ஐபிஎஸ் அலுவலரான தீபா சத்தியனின் இந்தச் செயல் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காவல் துறையினரின் இந்த நடவடிக்கைகள் அம்பத்தூர் காவல் சரக மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க...அபாய கட்டத்தை நெருங்கும் காற்று மாசு: டெல்லி அரசு எடுத்துள்ள அதிரடி திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.