சென்னை தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சட்ட கல்லூரிக்கு நிரந்தர கட்டடங்கள் கட்டுவதற்கு உண்டான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடுகள் குறித்து ஆலோசனை செய்தார். மேலும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தேனி மாவட்ட பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு!