ETV Bharat / state

சென்னை குற்றச்செய்திகள்: தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு.. !

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 10:23 PM IST

Chennai Crime News: சென்னையில் ரவுடி கும்பல் கைதானது முதல் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த கார் திருட்டு வரையிலான குற்றச் சம்பவங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

chennai crime
chennai crime

சென்னை: ரவுடி கும்பலைக் கைது செய்த காவல்துறை: சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்கிற துப்பாக்கி கார்த்தி. இவர் மீது நான்கு கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 29 வழக்குகள் நினைவில் உள்ளன. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக இவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், நீதிமன்ற பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டது. இதனால் காவல்துறை துப்பாக்கி கார்த்திகை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னை போரூர் அடுத்த மௌலிவாக்கம் பகுதியைப் பதுங்கி இருந்த ரவுடி துப்பாக்கி கார்த்திகை காவல்துறை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவருடன் பதுங்கி இருந்த அவரது கூட்டாளி மணிவர்மா என்பவரையும் காவல்துறை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட பட்டாக்கத்திகளை காவல்துறை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு: சென்னையில் பெண் ஐடி ஊழியரை எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 81,441 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தமிழகக் காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பாலியல் தொடர்பாக 1,510 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கற்பழித்து கொலை செய்ததாக 25 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பெண்கள் மீது ஆசிட் வீசியதாக 24 வழக்குகளும், கடத்தலில் ஈடுபட்டதாக 961 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித கடத்தல் தொடர்பாக 1,354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வரதட்சணை கொடுமை காரணமாகப் பலியானவர்களின் வழக்கு 111 ஆகவும், வரதட்சணை கொடுமை வழக்குகள் 205 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கணவர் மற்றும் உறவினர்களால் பெண்கள் அனுபவிக்கும் கொடுமை தொடர்பாக 3,037 வழக்குகளும், பாலியல் சீண்டல்கள் தொடர்பாக 3,948 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்கள் காணாமல் போனதாக 41,748 வழக்குகளும், பெண் வன்கொடுமை மற்றும் போக்சோ தொடர்பாக 27,587 வழக்குகளும் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

மோசடி வழக்கில் பெண் உட்பட இருவர் கைது: சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தனியார் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காகச் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லயன் முத்துவேல் என்பவரை அணுகி 25 கோடி கடன் ஏற்பாடு செய்து தருமாறு கிருஷ்ணகுமார் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து லயன் முத்துவேலும் 25 கோடி ரூபாய்க் கடன் வாங்கி தர ஏற்பாடு செய்வதாகக் கூறி அதற்கு முன்பணமாக கிருஷ்ணகுமார் இடம் இருந்து சுமார் 86 லட்ச ரூபாய் பெற்று உள்ளார். இதையடுத்து கடனும் வாங்கி தராமலும், முன் பணமாக வாங்கிய 86 லட்சம் ரூபாயைத் திருப்பி தராமலும் லயன் முத்துவேல் தலைமறைவாகி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார், இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்த காவல்துறை மோசடி செய்து தலைமறைவான லயன் முத்துவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நங்கநல்லூரை சேர்ந்த ஏஞ்சலினா கிறிஸ்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் லயன் முத்துவேல் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இருவரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு வாசலில் நின்ற கார் திருட்டு; காவல்துறை தீவிர விசாரணை: சென்னை, வேப்பேரி சாலை தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் கிளன்ட் மார்க். இவர் தனது காரை வழக்கம்போல் இரவு நேரத்தில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து, வழக்கம் போல் மறுநாள் காலை கிளண்ட் மார்க் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது, அவரது கார் வீட்டு வாசலிலிருந்து காணாமல் பொய்யுள்ளது. இதனால் அதிர்சடைந்த கிளண்ட் மார்க் இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாகப் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மர்ம நபர் ஒருவர் காரை திருடி செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "எல்லா உயிர்களும் சமம் எனச் செல்வது ஒன்றும் ஆபத்தான கருத்து இல்லை" - கவாஜாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கம்மின்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.