ETV Bharat / state

போலீஸ் அய்யா என் பொண்டாட்டி என்ன அடிச்சிடுச்சு...!

சென்னை: தனது மனைவி தன்னை தாக்கியதாகக் கட்டடத் தொழிலாளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதல் தகவல் அறிக்கை
author img

By

Published : May 2, 2019, 5:00 PM IST

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. கட்டட தொழிலாளியான இவர் தனது மனைவி தனலட்சுமியுடன் அதே பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில் தனலட்சுமி அதே பகுதியில் உள்ள தனது சித்தியின் பழக்கடைக்கு அடிக்கடி சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் வேலைக்குச் செல்லும் கார்த்திக்கு உரிய நேரத்தில் உணவு சமைத்துக் கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கார்த்தி தனது மனைவியிடம் சமைக்காதது குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தனலட்சுமி கரண்டியால் கணவரை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கார்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கைப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சரியாக உணவு சமைக்கவில்லை என்று கூறிய கணவரை கரண்டியால் அடித்த மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள பொன்னுவேல் புரத்தில் கொத்தனாராக இருக்கும் கார்த்தி என்பவர் தனது மனைவி தனலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

அந்த பகுதிக்கு அருகே உள்ள தனது சித்தியின் பழக்கடைக்கு தனலட்சுமி அடிக்கடி சென்றுவிடுவதால் வீட்டில் சரியான நேரத்திற்கு சமையல் செய்யாமல் இருந்தது குறித்து கார்த்திக் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது தனலட்சுமியின் சித்தி அபிராமியும் அங்கு வந்துள்ளார்.

இதனையடுத்து கரண்டியால் கார்த்திக்கின் நெற்றியிலும், இடது கையிலும் மனைவி தனலட்சுமி அடித்துள்ளார். இதில் கார்த்திக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து மனைவி தனலட்சுமி மற்றும் அவரது சித்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.