உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று (மே 24) மட்டும் 765 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் இதுவரை 10,576 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
![மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் பட்டியல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-corporation-corona-list-script-image-7209208_25052020110401_2505f_1590384841_1080.jpg)
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை