சென்னையில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கரோனா தொற்று தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ள போதிய இடங்கள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போதுவரை மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்கலைக்கழகம் ஒப்படைக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விரைந்து பல்கலைக்கழக வளாகத்தை ஒப்படைக்காத பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி உள்ளிட்ட இடங்கள் கரோனா சிகிச்சைகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.