சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் இணைந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனையை தடுக்கும் வகையில் வணிகர் சங்கங்களுடன் பலமுறை ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் அவ்வாறு நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் சுமார் 11.66 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டோர் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 2005இன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்டவைகளை விற்ற 100 வணிக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதுக்கடையை மாற்றக் கோரிய வழக்கு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு