ETV Bharat / state

அரசுத்துறை சார்ந்தவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை தொழில் வரியினை செலுத்த வேண்டும்... சென்னை மாநகராட்சி - Business tax is to be paid every six months

2022-23 நிதியாண்டிற்குண்டான முதலாம் அரையாண்டுக்கான தொழில் வரியினை செலுத்துமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசுத்துறை சார்ந்தவர்களிடம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொழில் வரியினை செலுத்த வேண்டும்...சென்னை மாநகராட்சி

author img

By

Published : Aug 22, 2022, 10:29 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில பிற அரசுத்துறை சார்ந்த அலுவலர், பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொழில் வரியினை செலுத்த வேண்டும். அரையாண்டுக்கான வருமானம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திருத்தியமைக்கப்பட்ட அரையாண்டு தொழில்வரியை பொறுத்தவரையில் ரூ. 21,001 முதல் ரூ.30,000 வரை வருமானம் பெறுவோர் ரூ.135 செலுத்த வேண்டும்.

1.ரூ 30,001 - 45,000; ரூ 315,
2.ரூ 45,001 - 60,000; ரூ 690,
3.ரூ 60,001 - 75,000; ரூ 1025,
4.ரூ 75,001 மற்றும் அதற்குமேல் ரூ. 1,250 தொழில் வரியாக செலுத்த வேண்டும்.

மேலும் சென்னை மாநகராட்சிக்கு தொழில் வரியை செலுத்தும் முறைகளைப் பொறுத்தவரையில் வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி அலுவலர்களின் பெயரில் காசோலைகள், அல்லது வரைவோலைகள், கடன் பற்று அட்டை மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம், ஆய்வாளர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான
வரிசீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி கனரா வங்கி கணக்கு எண். 0976201003413, பார்க் டவுன் கிளையில், IFSC Code No CNRBooode76 MICR Code of the Branch 600015030 என்ற வங்கி கணக்கின் மூலம் ECS / NEFT / RTGS வகைகளில் தொழில் வரியினை செலுத்தி, அதற்குண்டான விவரத்தினை arohqpt@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி அதற்குண்டான வரி ரசீதினை மின்னஞ்சல் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைதளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் (Nil Transaction fee) தொழில்வரியினை செலுத்தலாம். வரி செலுத்த தவறும் பட்சத்தில் சென்னை மாநகர முனிசிபல் சட்ட விதி 1979 துணை விதி 138Fஇன் படி அபராதம் வட்டித்தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும்.

பெருகர சென்னை மாநகராட்சியின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்திட வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.