ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நல விவரங்கள் குறித்து கேட்டறிய தொடர்பு எண்கள்! - கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள்

சென்னை : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் தங்கள் உறவினர்களின் உடல்நல விவரங்கள் மற்றும் பிற தகவல்களைப் பெற மாநகராட்சி தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது.

chennai corporation released contact numbers to get the health details of corona patients

author img

By

Published : Aug 17, 2020, 4:47 PM IST

சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 650 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 698 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 498 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதிக பாதிப்புள்ள நபர்கள் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பாதிக்கப்பட்ட நபரை சந்திக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. அவர்களின் உடல்நிலையை அறிய அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து சென்றால் அவர்களுக்கும் கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களில் நலன் கருதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் உடல்நல விவரங்கள், பிற தகவல்கள் ஆகியவற்றைப் பெற தொடர்பு எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு :

1. அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - 94999 66103

2. இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை - 78258 84974

3. அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - 044-2836 4964/

044-2836 4965

4. அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - 044-2528 1350

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.