சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு மண்டத்தில் வார்டு 170 முதல் 182 வரையில் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே மின்னணு கழிவு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன், சார்ஜர்கள், டிவி, மிக்சி, ஃபேன், கிரைண்டர் உள்ளிட்ட பயன்படுத்த முடியாத மின்னணு கழிவுப்பொருட்களை மேற்படி வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு கழிவு நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். இதற்கான முகாம் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும், இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளான வளசரவாக்கம், பெருங்குடி, ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை பெறுவதற்காக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மண்டல, கோட்ட அலுவலகங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி பகுதிகளில் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை பொதுமக்கள் மின்னணு கழிவுகளை வழங்க வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கட்டுமானப் பொருட்களாக மாறும் கழிவுகள்! - அசத்தும் கல்லூரி