ETV Bharat / state

கட்டட கழிவிற்கு ரூ.1.87 கோடி அபராதம் வசூல்..! சென்னை மாநகராட்சி அறிவிப்பு என்ன?

Chennai corporation notification: கடந்த ஆண்டு ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை, பொது இடங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, 1 கோடிக்கும் மேலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த இடங்களில் கழிவுகளை கொட்ட வேண்டும் என்பது குறித்தும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட கழிவிற்கு ரூ.1.87 கோடி அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 3:21 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘தூய்மை சென்னை’ என்ற திட்டத்தின் மூலம் சென்னையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால், அதற்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவான கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ. 2 ஆயிரமும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும்.

இதை மீறுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019ன் படி அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவான கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ. 2 ஆயிரமும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்ட ஒதுக்கீடு
செய்யப்பட்ட இடங்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. திருவொற்றியூர் - திருவொற்றியூர் பக்கிங்ஹாம் கால்வாய் சாலை சாத்தங்காடு.

2. மணலி காமராஜ் சாலை, மணலி, (மண்டல அலுவலகம். 2 அருகில்).

3. மாதவரம் - சி.எம்.டி.ஏ.டிரக் முனையம், இரவு காப்பகம் அருகில், மாதவரம் பேருந்து முனையம் பின்புறம்.

4. தண்டையார்பேட்டை வடக்கு அவென்யூ சாலை, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி.

5. இராயபுரம் - கால்நடை டிப்போ (பகுதி) அவதான பாப்பையா சாலை, (சென்னை மாநகராட்சி பள்ளி எதிரில்).

6. தி.ரு.வி.க நகர் - கால்நடை டிப்போ (பகுதி) அவதான பாப்பையா சாலை, (சென்னை மாநகராட்சி பள்ளி எதிரில்).

7. அம்பத்தூர் CTH சாலை, (உழவர் சந்தை அருகில்).

8. அண்ணாநகர் முதல் பிரதான சாலை ஷெனாய் நகர், (கெஜலட்சுமி காலனி அருகில்).

9. தேனாம்பேட்டை லாயிட்ஸ் காலனி, (மாநகராட்சி ஐ.டி.ஐ.நிறுவனம் அருகில்).

10. கோடம்பாக்கம் - குருசிவா தெரு எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை கோடம்பாக்கம், (ஆர்10 எம்.ஜி.ஆர் காவல் நிலையம் அருகில்).

11. வளசரவாக்கம் நடராஜன் சாலை சந்திப்பு மற்றும் பாரதி சாலை, (ராமாபுரம் ஏரி அருகில்).

12. ஆலந்தூர் - கிருஷ்ணாநகர் பிரதான சாலை ஒத்தவாடைமயானபூமி அருகில்.

13. அடையாறு - வேளச்சேரி மயானபூமி வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில்.

14. பெருங்குடி -200 அடி ரேடியல் சாலை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம்"

15. சோழிங்கநல்லூர் - கங்கை அம்மன் கோவில் தெரு விரிவு, காரப்பாக்கம், (தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் அருகில்).

ஆகிய 15 மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 இடங்களில் மட்டும் தான், கட்டிடக் கழிவுகளை கொட்ட இடம் அளிக்கப்பட்டுள்ளது” என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதம்: மேலும், “20 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக கட்டிடக் கழிவுகளை உருவாக்குபவர்கள் (Bulk Waste Generators) பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள மறு பயன்பாட்டு மையங்களுக்கு கட்டிடக் கழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அவ்வாறு கட்டிடக் கழிவுகளை அனுப்புவதற்கு முன், உரிய கட்டணத்தை பெருநகர சென்னை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும்.

பின்னரே கட்டிடக் கழிவுகள் கொட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள 15 இடங்களில் நாள்தோறும் சராசரியாக ஆயிரத்து 60 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு 1 கோடியே 87 லட்சத்து 88 ஆயிரத்து 678 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது” என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவையை கூல் கோவையாக மாற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்.. "ஜிப் லைன்", "ஜிப் சைக்கிள்" ரைடு என குதூகலிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.