தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுப் புழுக்கள் பரவமால் தடுப்பது எப்படி என வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நோய் தொற்றுகள் பரவாமல் தடுக்கவும், நோய் தொற்றுகள் பரவும்படியான இடங்கள் உள்ளதா எனக் கண்டறிவதற்கும் மாநகராட்சி தரப்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஒட்டுமொத்தமாக உள்ள 200 வார்டுகளிலும் சேர்த்து 3,043 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனையும் தாண்டி டெங்கு கொசுப் புழுக்கள் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்களை பரப்பும் விதமாக மாநகராட்சி ஊழியர்களின் அறிவுரைகளை கடைபிடிக்காத வீடுகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களுக்கு கடும் அபராதத் தொகையினை மாநகராட்சி அலுவலர்கள் விதித்து வருகிறார்கள்.
அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதத் தொகையானது கடந்த வாரத்தில் ரூ. 27லட்சம் இருந்ததை தாண்டி தற்போது 32 லட்சத்து 74 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு