ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்த திட்டம்!

author img

By

Published : Sep 13, 2021, 8:13 PM IST

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளை 95.25 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்
ஸ்மார்ட் சிட்டி திட்டம்

சென்னை: ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அனைத்து மாநிலத்திலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் முன்மொழிந்த 65 திட்டங்களை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 12 திட்டங்கள் சென்னை ஸ்மார்ட் சிட்டி முன்மொழிந்தவை ஆகும்.

இந்த 12 திட்டங்களில் ஒன்றாக சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகள், அதன் உள்கட்டமைப்பை 95.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டம் அமைந்துள்ளது.

18 பள்ளிகள்

இந்த 95.25 கோடி ரூபாயில் 19.5 கோடி (20%) ரூபாயை சென்னை ஸ்மார்ட் சிட்டி ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 76.2 கோடி ரூபாயை (80%) AFD எனப்படும் பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 18 பள்ளிகளில் சுற்றுப்புறம், உள்கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்படும். எட்டு பள்ளிகளில் மாணவர்கள் அமரக்கூடிய இருக்கைகளை தரம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திறன் மேம்பாடு வகுப்புகள்

அதுமட்டுமில்லாமல் டிஜிட்டல் வகுப்பறை, ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு வகுப்புகள், மாணவர்களுக்கு விளையாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை என பல திட்டங்களை மாநகராட்சி செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் முதல் செயல்பாடாக "பள்ளி தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் உருமாற்றம் திட்டம்" School leadership development and transformation program for GCC schools) செயல்படுத்தப்பவுள்ளது.

இந்தச் செயல்பாட்டில் மாநகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், மாநகராட்சி கல்வித்துறை அலுவலர்கள் என மொத்தம் 100 நபர்களுக்கு ஐந்து மாதம் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக இரண்டு கோடியே 44 லட்சத்து மூன்றாயிரத்து 769 ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அண்ணா பிறந்தநாள் -700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.