ETV Bharat / state

சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம் - வைரலாகும் கள வீடியோ! - ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை

சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு நடவடிக்கையாக, கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் படர்ந்துள்ளஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 17, 2023, 10:12 AM IST

சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கூவம், பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக ஆகாயத்தாமரை அகற்றும் பணிகள் நேற்று (மார்ச்.16) தொடங்கின. இந்த பணிகளைச் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெறுவது குறித்த வீடியோ ஒன்றை ஆணையர் ககன் தீப் சிங் பேடி களத்திலிருந்து வெளியிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் 3,463 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களின் மூலம் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள், 251 கையினால் கொண்டு செல்லும் புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகை பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் குடிசை பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் புகைப் பரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நீர்வழிக்கால்வாய்காளில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், 371 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 129 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகின்றன, மேலும் நீர்வழி தடங்களில் பெரிய இயந்திரம் செல்ல முடியாத இடத்திற்கு ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி பக்கிங்காம் கால்வாய், கூவம் கால்வாய் உள்ளிட்ட பெரிய கால்வாய்களில் ஆகாயத்தாமரை, தேவையற்ற செடிகள் பல்வேறு வகையான இயந்திரங்களை அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்வாய்களில் நடைபெற்று வரும் பணிகளை இன்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்டோர் நேரடியாக ஆய்வு செய்து பணிகள் எவ்வாறு செல்கிறது என்பது குறித்து வீடியோவை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசுவை ஆரம்ப நிலையிலேயே தடுப்பதற்கு மிதக்கும் இயந்திரம் வைத்து ஆகாயத்தாமரை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பு வேலிகள் அமைத்து இருக்கும் ஆகாயத்தாமரையை பொறுமையாக வெளியில் எடுத்து அவற்றை தனியாக ஒரு இடத்தில் வைக்கப்பட்டு அதற்கு கொசு மருந்து அடிக்கப்படுகிறது.

மேலும், ஆற்றின் ஓரமாக வைத்தால் மழை அதிகமாக பெய்யும் பொழுது தண்ணீர் அதிக அளவில் உயர்ந்து மீண்டும் ஆறுக்குள் அந்த ஆகாயத்தாமரை அடித்துச் செல்லப்படுகிறது. எனவே, இது போன்று தனியாக ஒரு இடத்தில் வைத்து அதை சுத்தம் செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது துணை ஆணையர் சிவகுரு, மாநகராட்சி சுகாதார அதிகாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: யானைகள் வழித்தடம் ஆக்கிரமித்திருந்தால் அரசு மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.