ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்டல வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதில் சென்னைக்கான சிறப்புப் பணிக்குழு அதிகாரிகளாக ராஜேந்திர குமார் இ.ஆ.ப, அப்பாஸ் குமார் இ.கா.ப ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை மாநகரில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து ராஜேந்திர குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை மாநகரை பொறுத்தவரை கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஆணையர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாகவும், தொய்வின்றியும் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க...கரோனா பாதித்த 3 பேர் குணமடைந்தனர் - மருத்துவக் கல்லூரி முதல்வர்