சென்னை: வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மூன்றாவது எண் கேட் வழியாக பொதுமக்கள் உள்நுழைந்து புகார் மனுக்கள் அளித்து வருவது வழக்கம்.
ஆனால் கரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படக்கூடிய குறைதீர்க்கும் அறை மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே பொதுமக்கள் புகார்களை அளித்து வந்தனர்.
நேரடி புகார் அளிக்க அனுமதி
இந்த நிலையில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி முதல் மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக வந்து புகார் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆணையர் அறிவுரை
தொடர்ந்து, நேற்று (ஜூலை 26) காலை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் புகார் மனுக்கள் பெறக்கூடிய குறைதீர்க்கும் அறை மற்றும் புகார் அளிக்க வரக்கூடிய பொதுமக்களை, ஒழுங்குபடுத்தும் இடம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாதுகாப்பு பிரிவு காவலர்கள் மற்றும் புகார் மனு பெறும் காவலரிடம், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களின் மனநிலையை அறிந்து நடந்துகொள்ள வேண்டும் என ஆணையர் அறிவுரை வழங்கினார். பின்னர் காவல் ஆணையர் அலுவலக பத்திரிகையாளர் அறைக்குச் சென்று அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: பூங்கா பராமரிப்பில் குறைபாடு, தொய்வு என்றால் ஒப்பந்தம் ரத்து - மாநகராட்சி எச்சரிக்கை