சென்னை மாநகராட்சி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மக்கள் அதிகம் கூடுமிடங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் உத்தரவின்படி, திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவைகள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
அவ்வாறான அனைத்து நடவடிக்கைகளும், கரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே தவிர, அச்சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குவதற்காக அல்ல எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பழங்கள் விற்பனை மையங்கள், காய்கறி அங்காடிகள், இறைச்சி சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், மளிகைக்கடைகள் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவித்தார். மேலும் கரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: கரோனா பீதியில் கிளினீக்கை மூடிய மருத்துவர்!