ETV Bharat / state

வெளியூரிலிருந்து வரும் ஊழியர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தல்! - chennai corporation commissioner

சென்னை: வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் ஊழியர்களை அந்த நிறுவனம் 14 நாள்கள் தனிமைப்படுத்திய பிறகே பணியைத் தொடங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

chennai
chennai
author img

By

Published : Aug 3, 2020, 1:05 PM IST

ராஜஸ்தானின் ஹெல்த் பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்ட இலவச தனிமைப்படுத்தும் மையத்தை, தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், "இது சென்னையில் நான்காவது இலவச தனிமைப்படுத்தும் மையம். சென்னையில் 100 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்தால், பத்துக்கும் குறைவான நபர்கள் மட்டுமே உறுதிசெய்யப்படுகின்றனர்.

சென்னையில் நோய்த்தொற்று குறைந்தது என மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்லக்கூடாது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் சென்னை போன்ற மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

மதுரை, கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் போன்ற அதிக பரவும் மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்திவருகிறோம். இதுவரை சுமார் 28 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் சித்தா மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் கூடிய விரைவில் திறக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

பின்னர் ஆணையர் பிரகாஷ் பேசுகையில், "சென்னையில் இ-பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை. நோய்த்தொற்று கட்டுக்குள் வரவேண்டும் என்றால் தொடர்ந்து மூன்று மாதங்கள் அரசு கூறும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்தி, அவர்களை தனிமைப்படுத்திய பிறகே பணியைத் தொடங்க வேண்டும். அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும்.

இ-பாஸ் சரியான விவரங்கள் இருந்தால் கண்டிப்பாக கொடுக்கப்படும். மாநகராட்சி தவிர பிற யாரேனும் இ-பாஸ் வழங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 395 மருத்துவ முகாம்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.