ETV Bharat / state

"மாநகர சுகாதாரத்திற்கு மாநகராட்சி ஊழியர்களை மட்டும் குறை கூறுவது நியாயமா?.. சென்னை மாநகராட்சி ஆணையர்! - சென்னை மாநகராட்சி ஆணையர்

சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவை என வீடியோ மூலம் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

விடியோ மூலம் விழிப்புணர்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர்

author img

By

Published : Aug 13, 2023, 7:07 PM IST

விடியோ மூலம் விழிப்புணர்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். வழக்கம் போல பள்ளி முடிந்ததும் தாய் ஹர்சின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்ற போது சிறுமியை மாடு அதன் கொம்பால் குத்தி தூக்கி வீசியது.

பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில், அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்றினர். அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அந்த சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதைத் தொடர்ந்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் கால்நடைகள் திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன. அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

மேலும், சென்னை ஆணையர் பல்வேறு பணிகள் ரீதியாக தினக் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். மாடு முட்டிய சம்பவத்திற்கு பிறகு, மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக தீவிர ஆய்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் இறங்கி உள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு பணிகளை ஆய்வு செய்ய, சென்னை செயின்ட் மேரி சாலையில் உள்ள ஒரு பள்ளியில், ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (ஆகஸ்ட்13) ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அந்த பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அங்கு வசிக்கும் மக்களால், குப்பை மற்றும் கட்டுமான கழிவுகள் போடப்படுவது குறித்தும், அங்கு இருக்கும் கால்வாயில் மாடு ஒன்று நின்றுக் கொண்டிருந்தது குறித்தும், வீடியோ மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது குறித்து, அவர் அந்த விடியோவில், "கால்வாயில் நின்று கொண்டு இருக்கும் மாடு, அந்த கழிவு நீரை குடிக்கிறது. மேலும், அந்த மாடுகளிடமிருந்து பெறப்படும் பாலை பெரும்பாலும் உணவகங்களில் வாங்குகிறார்கள். தனிநபர் சிலரும் அதை, கறந்த பால் என்று வாங்குகிறார்கள்.

ஆனால், மாட்டை எப்படி பராமரிப்பது என்று ஒரு வரைமுறை இருக்கிறது. மாட்டுக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. அதுவும் ஒரு உயிர் தான் என்று சொல்கிறோம். மாட்டுக்கும் இங்கு உரிமை உண்டு. அதை சரியான முறையில் பாதுகாப்பதும் உணவு அளிப்பது என்பது தான் முக்கியம். மேலும் பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தெரு ஓரத்தில் போட்டுவிடுகிறார்கள். இதில் மாநகராட்சி உழியர்களை மட்டும் குறைசொல்வது நியாயம் இல்லை.

தினமும் 6,000 மெட்ரிக் டன் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிக் கொண்டு இருக்கிறார்கள். மாநகராட்சியை மட்டும், குறை சொல்வது தவறு. சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது, மக்களின் பங்கு ஆகும். ஒரு நகரத்தை சுத்தமாக வைத்திருப்பது குறித்து பொதுமக்கள் சுயமாக சிந்திக்க வேண்டும். 30% சதவீத மக்கள் செய்யும் தவறால் மொத்த மாநகரமும் பாதிப்படைகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: சரத் பவார் - அஜித் பவார் திடீர் சந்திப்பு... மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் புயல் வீசுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.