தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தினசரி செய்தித்தாள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றுவது, நோய்த் தொற்று ஏற்படாதபடி செய்தித்தாள்களை தயாரிப்பது, விநியோகிப்பது குறித்து அனைத்து செய்தித்தாள்கள் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரிப்பன் பில்டிங்கில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது செய்தித்தாள்களை வைரஸ் தொற்று ஏற்படாதபடி விநியோகிப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், செய்தித்தாள்கள் தயாரிக்கும் இடத்தில் எவ்வாறு கிருமிநாசினி உள்ளிட்டவை தெளிக்கப்படுகிறது என்பன குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி, கரோனா நோய்த் தொற்று ஏற்படாதபடி செய்தித்தாள்களை விநியோகிக்க, செய்தித்தாள் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க...உணவின்றி தவித்த நாடோடிகள்... உதவிக்கரம் நீட்டிய நெல்லை நிர்வாகத்துக்கு ஈடிவி பாரத் நன்றி!