தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், மாநகராட்சியும் காவல் துறையினரும் பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஷிஃப்டிற்கு மூன்று நபர்கள் என 144 கண்காணிப்புக் குழுவினர் கண்காணிப்புப் பணியில் உள்ளனர். நேற்றுவரை 26 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களும், 7.30 கோடி ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதிமுதல் மார்ச் மாதம் 28ஆம் தேதிவரை எதுவும் பறிமுதல்செய்யாததால் அங்கு பணியிலிருக்கும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையரும் மாவட்டத் தேர்தல் அலுவலரான பிரகாஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ராஜா, தாமோதரன், பாஸ்கரன் மூன்று நபர்களை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் கண்காணிப்புக் குழுவாக மாநகராட்சி நியமித்திருந்தது. அவர்கள் மூன்று நாள்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இருப்புவைத்து விற்க ஏற்பாடு!