அறிகுறிகள் இல்லாமல் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் அவரவர் வீடுகளில் 15 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி திருவொற்றியூர் மண்டலத்தில் நான்கு பேர், மணலி, மாதாவரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் தலா ஏழு பேர், திரு.விக நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா மூவர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் தலா இருவர் என மொத்தம் 40 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுபோன்று வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நபர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் அவர்கள் மீது காவல் துறையினரால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: உலகத்திலேயே கேவலமாக ஊரடங்கை அமல்படுத்தியது தமிழ்நாடு அரசுதான் - ஸ்டாலின்