ETV Bharat / state

15 ஆயிரத்தைக் கடந்த திருவிக நகர் கரோனா பாதிப்பு எண்ணிக்கை

சென்னை: திருவிக நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

chennai corona updated by corporation
chennai corona updated by corporation
author img

By

Published : Oct 26, 2020, 12:45 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இரண்டு மண்டலங்களுக்கு அடுத்து ராயபுரம், தண்டையார்பேட்டை, அடையாறு, தேனாம்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது திருவிக நகரிலும் அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தோரின் விழுக்காடு 93ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடாக உள்ளது.

இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 441 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 9 ஆயிரத்து 639 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்து 592 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.

மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவரின் பட்டியல்,

அண்ணா நகர் - 21,447 பேர்

கோடம்பாக்கம் - 21,227 பேர்

தேனாம்பேட்டை - 18,475 பேர்

ராயபுரம் - 17,588 பேர்

தண்டையார்பேட்டை - 15,297 பேர்

அடையாறு - 15,243 பேர்

திரு.வி.க. நகர் - 15,079 பேர்

வளசரவாக்கம் - 12,475 பேர்

அம்பத்தூர் - 13,720 பேர்

திருவொற்றியூர் - 5,896 பேர்

மாதவரம் - 7,001 பேர்

ஆலந்தூர் - 7,900 பேர்

சோழிங்கநல்லூர் - 5,316 பேர்

பெருங்குடி - 7,046 பேர்

மணலி - 3,057 பேர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.