உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகள் மூடப்படும் என்ற வதந்தி சமூகவலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் தடுப்பு, விழிப்புணர்வு தொடர்பாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு, தனியார் மூலம் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை பயிற்சி நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டள்ளன.
அதே சமயம் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் மளிகை கடைகள், பால் கடைகள், மருந்தகங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்டவை வழக்கம் போல் இயக்கும். குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படாது.
இந்த அறிவிப்புகளுக்கு மாறாக சமூக வலைதளங்களில் வந்ததிகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று குறிப்பிடிப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கரோனா பீதி: கீழடியில் பார்வையாளர்களுக்குத் தடை!