ETV Bharat / state

பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை சினிமா பாணியில் பிடித்த துணை ஆணையர்

author img

By

Published : Jun 4, 2019, 2:09 PM IST

சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துணை ஆணையர் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்துள்ளார்.

சென்னை

மெரினா கடற்கரை சாலையில் சில தினங்களாகவே இருசக்கர வாகன பந்தயம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வெறும் ரேஸ் என்பதைக் கடந்து, பணம், செல்ஃபோன், விலை உயர்ந்த பொருட்கள் என இந்த ரேஸ்களில் புழங்கும் பணத்தின் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த வண்ணம் இருந்துள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை போக்குவரத்துக் காவல் துறை, சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் 29 இடங்களில் போக்குவரத்துத் துணை ஆணையர் ஸ்ரீஅபிநவ், திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணவ் சிங் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில், கடந்த இரண்டாம் தேதி முதல் தற்போது வரை பைக் ரேஸில் ஈடுபட்டது, குடிபோதையில் வாகனம் ஒட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியது என இதுவரை 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ஆட்டோ உட்பட மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை சினிமா பாணியில் பிடித்த துணை ஆணையர்

இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இவர்களை பார்த்தவுடன் தப்பியோட முயன்ற இளைஞர்களை போக்குவரத்துத் துணை ஆணையர் ஸ்ரீஅபிநவ் தனது காரிலேயே விரட்டிச் சென்று பிடித்துள்ளார். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அருண்குமாருக்கு தோல்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 21 பேரை கைது செய்து 10 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர், அவர்கள் அனைவரும் 18 வயதிற்கு கீழானவர்கள் என்பதால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திரைப்பட பாணியில் பைக் ரேஸில் ஈடுப்பட்டவர்களை துரத்தி சென்று பிடித்த துணை ஆணையர். வாகனச் சோதனையின் போது ஒரு காவலருக்கு காயம்.

சென்னை மெரினா கடற்கரையில் சாலையில் சில தினங்களாகவே இருசக்கர வாகன பந்தயம் நடைப்பெற்று வருகிறது. இதில் குறிப்பாக இரண்டு மூன்று நாட்களாக மெரினா கடற்கரையில் அதிக அளவில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தையத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த மோட்டார் சைக்கிள் பந்தையத்தில் பணம், அதிக விலைக் கொண்ட இருச்சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பந்தையம் வைத்து ரேஸில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இதனை தடுக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் 29 இடங்களில் போக்குவரத்து துணை ஆணையர் ஶ்ரீ அபிநாவ் மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணவ் சிங் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டுத்தப்பட்டனர். இந்த சோதனையில் இதுவரை கடந்த 2 தேதி வரை பைக் ரேஸில் ஈடுப்பட்டதாகவும், குடிபோதையில் வாகனம் ஒட்டியது, அதிவேகமாக வாகனம் ஒட்டியது, தலைகவசம் இல்லாமல் வாகனம் ஒட்டியது என இதுவரை 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 ஆட்டோ உள்பட மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் துணை  ஆணையர்கள் தலைமையில் நேற்று இரவு 10 மணி முதல் போலீசார் மெரினா கடற்கரை சாலையில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்களையும், மாறாக சந்தேகப்படும் வகையில் வாகனம் ஒட்டியவர்கள் என அனைவரிடம் விசாராணை மேற்கொண்டனர். அப்போது அதிகவேகத்தில் வாகனம் ஒட்டி வந்து பின்னர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்தவர்களை போக்குவரத்து துணை  ஆணையர் ஶ்ரீ அபிநாவ் தனது காரிலேயே துரத்தி சென்று பிடிக்கும் காட்சிகளும் இங்கு அரங்கேறியது.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அருண்குமார் என்கின்ற காவலர் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை பிடிக்க முயலும் போது தோல்பட்டையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதுவரை 21பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 10 க்கும் மேற்பட்ட வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் சார்பில் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் 18வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் குற்றப்பிரிவின் கீழ் தண்டனை அளிப்பதா,போக்குவரத்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதா என காவல்துறை யோசித்து வருகின்றனர்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.