உள்நாட்டின் முன்னணி நிறுவனமாக மாறியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், சமீபத்தில் ரீசார்ஜ் விலைகளை உயர்த்தியது. இந்த சூழலில், மக்கள் பயன்பெறும் 75 ரூபாய்க்கான ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பொதுத்துறைத் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மலிவான திட்டங்களை அதிகளவில் அறிமுகம் செய்ததையடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் குறைந்த விலையுள்ள திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ ரூ.75 ரீசார்ஜ் திட்டத்தின் பயன்கள்:
இந்த திட்டத்திற்கு ரூ.75 செலவு செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் செல்லுபடியாகும் காலம் 23 நாள்களாக இருக்கிறது. இதனால் தினசரி கணக்கில், சுமார் 3 ரூபாய் செலவு செய்தால், இந்த திட்டத்தின் பயன்களைப் பெறலாம்.
இதில் அனைத்து அழைப்புகளும் இலவசம் என்பது சிறப்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனுடன் 2.5 ஜிபி இன்டர்நெட் டேட்டா கிடைக்கும். இதை நாள் ஒன்றுக்கு 100 மெகாபைட் (MB) எனும் கணக்கில் பயன்படுத்தலாம். தினசரி வரம்பு தீர்ந்து போனால், கூடுதலாக 200 MB ஒருமுறை வழங்கப்படுகிறது.
இவை மட்டுமில்லாமல், ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் போன்ற சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். என்னதான் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தாலும், முதல் இடத்தில் பி.எஸ்.என்.எல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: |
ஆனால், சரியான நெட்வெர்க் சிக்னல் கிடைக்காததன் விளைவாக, அதற்கான வாடிக்கையாளர்கள் ஜியோவை நம்பி தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஏர்டெல், வோடாபோன் ஐடியா உடன் ஒப்பிடும்போது, ஜியோ தங்களின் ரீசார்ஜ் டேரிஃப்புகளை குறைவாகத் தான் வைத்திருக்கிறது.
வாடிக்கையாளர்களை இழந்தாலும் நாங்க தான் டாப்:
ஜூலை 2024 அன்று வெளியான தரவுகளின்படி, ரிலையன்ஸ் ஜியோ 7.50 லட்சம் வாடிக்கையாளர்களையும், பார்தி ஏர்டெல் 16.9 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 14.1 லட்சம் வாடிக்கையாளர்களையும் சமீபத்தில் இழந்துள்ளது. இதே நேரத்தில், அரசின் பி.எஸ்.என்.எல், 29.3 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகப் பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், முகேஷ் அம்பானியின் ஜியோ, 47 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது. 38 கோடி சந்தாதாரர்களுடன் ஏர்டெல் இரண்டாவது இடத்திலும், கடன் சுமையோடு இருக்கும் விஐ (வோடபோன் ஐடியா) 21 கோடி சந்தாதாரர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. கடைசியான 8.8 கோடி பயனாளர்களை பி.எஸ்.என்.எல் தங்கள் வசம் வைத்திருக்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.