சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்காக 700 படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு ஒன்று அமைக்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி முழுமை பெற்றுள்ளது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு, அறிகுறி இல்லாமல் உள்ளவர்கள், வர்த்தக மையத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.
இதுவரை, 290-க்கும் மேற்பட்டோர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வர்த்தக மையத்தில் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை. காற்றோட்டம் இல்லை என தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து புகாரளித்தனர். மேலும், கடந்த 8 ஆம் தேதி அங்கிருந்தவர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி, சுகாதாரத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இந்நிலையில், இன்று நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கு சென்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு நடத்தினார். அங்கு தங்கியிருப்பவர்களின் உரிய வசதிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நேரில் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: 4.48 லட்சம் பேர் கைது, ரூ.4.86 கோடி அபராதம்!