ETV Bharat / state

மாநகர பேருந்தில் ரகளை: 6 மாணவர்கள் கைது - chennai college students Engaged in conflict CCTV footage

சென்னை: மாநகர பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைத்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்  ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Students Engaged in conflict at city bus
chennai college students Engaged in conflict CCTV footage
author img

By

Published : Feb 11, 2020, 1:51 PM IST

சென்னை மந்தைவெளியிலிருந்து பிராட்வே வரை செல்லக்கூடிய வழித்தட எண் 21 என்ற மாநகரப் பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்பொழுது அதில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.

அதனை நடத்துனரும் ஓட்டுனரும் தட்டிக் கேட்டபொழுது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாணவர்கள் திடீரென மாநகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பாலாஜி சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாநகர பேருந்தில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட CCTV காட்சி

பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை தேடிவந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் வசிக்கும் புதுக்கல்லூரி மாணவர்களான மாதேஷ் (17), சூர்யா (19), இஸ்மாயில் (19) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் மாநில கல்லூரியைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களான திருவள்ளூரைச் சேர்ந்த பூபதி, மணிகண்டன், திருவலங்காட்டைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற 17வயது சிறுவன் கைது!

Intro:Body:சென்னை சென்ட்ரல் அருகே மாநகர பேருந்தில் மாணவர்களிடையே மோதல். பேருந்து கண்ணாடி உடைத்த மேலும் மூன்று மாணவர்கள் கைது.

சென்னை மந்தவெளியில் இருந்து பிராட்வே வரை செல்லக்கூடிய 21 என்ற மாநகரப் பேருந்து நேற்று சென்ட்ரல் அருகே செல்லும்பொழுது அதில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள் சிலர் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர்

அதனை நடத்துனரும் ஓட்டுனரும் தட்டிக் கேட்ட பொழுது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை முழுமையாக உடைத்தனர். இதனையடுத்து மாநகரப் பேருந்து ஓட்டுநர் பாலாஜி என்பவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் பேருந்து கலாட்டாவில் ஈடுபட்ட மாணவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்களான மாதேஷ் வயது 17 முதலாம் ஆண்டு பி ஏ, சூர்யா வயது 19 , இஸ்மாயில் வயது 19 ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் மாநில கல்லூரியைச் சேர்ந்த மேலும் 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூரை சேர்ந்த பூபதி,திருவலங்காடு சேர்ந்த சுரேஷ் வயது 19 , திருவள்ளூர் மாவட்டம் வேளாங்கண்ணி சேர்ந்த மணிகண்டன் வயது ஆகியோரை கைது செய்தனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.