ETV Bharat / state

அரசியல் பிரமுகருடன் எடுத்த புகைப்படத்தை காட்டி மோசடி செய்த பெண் கைது! - chennai district news

அரசியல் பிரமுகருடன் எடுத்த புகைப்படத்தை காட்டி மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடி மோசடி செய்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மோசடி செய்த பெண் கைது
மோசடி செய்த பெண் கைது
author img

By

Published : Sep 29, 2021, 11:38 AM IST

சென்னை: சேலையூரை சேர்ந்த பூபதி என்பவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் ”கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டெபி என்கிற ஸ்டெல்லா (41) என்பவர் தனக்கு அறிமுகமானார். தான் வழக்கறிஞராக இருந்து வருவதால் தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருந்து வருவதாக தெரிவித்தார்.

அரசியல் பிரமுகருடன் எடுத்த புகைப்படங்களையும் ஸ்டெபி காட்டினார். இதனால் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணி நிரந்தரம் பெற்றுத்தருவதாக ஸ்டெபி கூறினார். ஆனால் அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை தரவேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனை நம்பி ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தேன். இந்நிலையில், நீண்ட மாதமாக பணி மற்றும் பணமும் திருப்பித் தராமல் ஸ்டெபி ஏமாற்றி வருகிறார்” எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி ரூபாய் மோசடி

இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020 வரை சுமார் 35 நபர்களிடம் ஒரு கோடியே 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரை வேலை வாங்கி தருவதாக ஸ்டெபி ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஸ்டெபியை தீவிரமாக தேடி வந்தனர்.

மோசடி செய்த பெண்
மோசடி செய்த பெண்

குறிப்பாக பொதுமக்கள் ஸ்டெபிக்கு பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ஸ்டெபி என்கிற ஸ்டெல்லாவை நேற்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டெபி இடமிருந்து 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ஸ்டெபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரசு வேலை வாங்கித் தருவதாக அரசியல் பிரமுகர்களுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்து பணப்பறிப்பில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க : சென்னை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் - இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.