ETV Bharat / state

குற்றவாளிகளை குறிவைக்கும் சிசிடிவி: சென்னை காவல்துறையின் பலே ஐடியா! - Additional Commissioner Dinakaran

சென்னை: உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

chennai
author img

By

Published : Nov 21, 2019, 7:10 AM IST

Updated : Nov 21, 2019, 7:16 AM IST

அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர், ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் 12 நவீன ஏ.என்.பி.ஆர் கண்காணிப்பு கேமராக்கள், ஆயிரத்து 629 (1,629) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது. இதில், கூடுதல் கமிஷனர் தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் கூடுதல்ஆணையர் தினகரன் பேசுகையில், ”இந்த பகுதிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை பதிவு செய்யும் கேமரா பொறுத்தி உள்ளோம், இதன் மூலம் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க முடியும், இந்த ஏ.என்.பி.ஆர் கேமராக்கள்பொறுத்தும் பணி பல்வேறு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

முகப்பதிவை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கேமராக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று மாதத்தில் வேலைகள் முடிந்து தொடங்கப்படும்.

சிசிடிவி தொடக்க நிகழ்ச்சி

குற்றவாளிகளின் முகங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அந்த குற்றவாளி கோயம்பேடு பகுதிக்குள் நுழைந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்றவேண்டும்” என்றார்

இதையும் படிங்க: 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' -பென்னாகரத்தில் சிசிடிவி கேமரா

Intro:உலகிலேயே பாதுகாப்பான நகரமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் பேச்சு

Body:அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர் ஆவடி,திருநின்றவூர்ஆகிய பகுதிகளில் 12 நவீன ஏ.என்.பி.ஆர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 1629 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது இதில் கூடுதல் கமிஷனர் தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.Conclusion:பின்னர் நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் தினகரன் பேசுகையில் : இந்த பகுதிகளில் வாகனங்களின்
நம்பர் பிளேட்டை பதிவு செய்யும் கேமரா பொறுத்தி உள்ளோம், இதன் மூலம் குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிக்க முடியும், இந்த ஏ.என்.பி.ஆர் கேமராக்கள்
பொறுத்தும் பனி
பல்வேறு மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றார்.மேலும் முகப்பதிவை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கேமராக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணி யானது இன்னும் 3 மாதத்தில் முடிந்து துவாக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசி அவர், குற்றவாளிகளின் முகங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அந்த குற்றவாளி கோயம்பேடு பகுதிக்குள் நுழைந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும், இவை பொதுமக்களின் முயற்சியால் இந்த பணிகள் நடைபெற்றது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற வேண்டும் என தெரிவித்தார். உடன் இனை கமிஷனர் விஜயகுமாரி, துனை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கண்காணிப்பு கேமராக்கள் கொடுத்த மற்றும் அதனை வைக்க முயற்சி எடுத்த போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
Last Updated : Nov 21, 2019, 7:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.