தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள், பதிப்பாளா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெறும் 43ஆவது புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடக்கிவைத்தார்.
இந்தப் புத்தகக் காட்சியை முன்னிட்டு 750க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோடிக்கணக்கான பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
புத்தகக் காட்சிக்காக சிறப்பாக செயலாற்றிய எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் விருதுகளை வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "உடலுக்கு உடற்பயிற்சி போல மனதிற்கு பயிற்சி புத்தகங்களை வாசிப்பது. புத்தகங்கள் இல்லாமல் மனித இனம் வளர்ச்சி அடைந்திருக்காது. அடுத்த ஆண்டிலிருந்து புத்தகக் காட்சிக்கு, அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். இளைஞர்கள் புத்தகங்களைப் படிக்கவேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டிராஜன், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஆயிரக்கணக்கில் புத்தகங்களை கொடையாக வழங்கிய ஆசிரியை