ETV Bharat / state

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெடிகுண்டு வெடிக்கும் என்று காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : Nov 4, 2019, 12:05 AM IST

bomb

சென்னையில் இன்று மாலை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், தன் பெயர் இப்ராகிம் என்றும் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.

இதேபோல நெல்லையில் உள்ள சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடியில் உள்ள வடக்கு காவல் நிலையத்திற்கும் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட ’பாம் ஸ்குவாடு’ (Bomb squad) பிரிவினர் தயார்நிலையில் இருந்தனர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவந்தது. பின்னர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர்தான் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தனது உறவினர் ஒருவர் பெயரில் வாங்கிய சிம் கார்டை பயன்படுத்தி இவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. சிவக்குமாரை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் மிரட்டல் விடுத்த காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 03.11.19

தமிழகத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

இன்று மாலை 3மணியளவில் சென்னை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு மூலம் தொலைபேசி கால் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று கூறிவிட்டு அழைபபை துண்டித்துள்ளார். பின்னர் இதேபோல் நெல்லையில் உள்ள சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடியில் உள்ள வடக்கு காவல் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் கால் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், செல்போன் மூலம் பேசிய மர்ம நபரை போலிசார் தேடி வருகின்றனர்...

tn_che_06_unknown_call_bomb_blast_threat_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.