சென்னை கோயம்பேட்டிலுள்ள, பாஜக தேர்தல் அலுவலகத்தில், முன்னாள் IRS சரவணன் செய்தியாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “திமுகவிற்கு வாக்களித்தால் அனைத்து தினமும் ஏப்ரல் ஒன்று தான். திமுக தொடர்ந்து பொய் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இன்று (ஏப். 1) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் திறமையை பாராட்டி மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி உள்ளது. இந்த விருது வழங்கப்பட்டதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தேர்தல் பரப்புரை ஆடியோ (பிரதமர் நரேந்திர மோடி என்ற பாடல்) வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநில பாஜக ஊடகப்பிரிவு செயலாளர் ஸ்ரீ ரங்கா, பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக மாநில தலைவர் சி.டி.நிர்மல் குமார், டியோ ஆடியோ தலைவர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் தடை; ஆ.ராசா கோரிக்கை நிராகரிப்பு!