இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸால் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"தமிழ்நாட்டில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40இல் இருந்து 41ஆக உயர்ந்துள்ளது. கரோனா சிகிச்சைக்கான மருத்துவக் கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கரோனா சிகிச்சைக்காக 17 ஆயிரம் படுக்கைகள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 மாவட்டங்களிலும் வீடு வீடாகச் சென்று இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருந்தால் சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும்.
தற்போது மேலும் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் - விஜய பாஸ்கர்