ETV Bharat / state

மின்சார ரயில் நடைமேடையில் ஏறிய விவகாரம் - ஓட்டுநர் சஸ்பெண்ட்!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் நடைமேடையில் ஏறியது தொடர்பான விபத்தில் ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கடற்கரை மின்சார ரயில் நடைமேடையில் ஏறிய விவகாரம் - ஓட்டுனர் சஸ்பெண்ட்!

author img

By

Published : May 27, 2022, 12:35 PM IST

Updated : May 27, 2022, 1:21 PM IST

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி மாலை பணிமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட மின்சார ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை அப்போது பணியில் இருந்த லோகோ பைலட் பவித்ரன் என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில், திடீரென நிலை தடுமாறிய ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மற்றும் அங்கிருந்த கட்டிடங்களில் மோதி விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்திற்கு ரயிலில் பிரேக் பழுதாகி இருந்ததாக லோகோ பைலட் பவித்ரன் கூறினார். எனவே, இந்த விபத்து தொடர்பாக எழும்பூர் ரயில்வே காவல்துறை, லோகோ பைலட் பவித்ரன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 279 படி, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் இயக்குதல் மற்றும் ரயில்வே சட்டப்பிரிவுகளான 151- ரயில்வே சொத்தை சேதப்படுத்துதல், 154 - ரயில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமான செயலில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மின்சார ரயில் நடைமேடையில் ஏறிய விவகாரம் - ஓட்டுநர் சஸ்பெண்ட்

இதனையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழு சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில், 5 நபர்கள் கொண்ட குழுவாக செயல்பட்டது. மேலும், இந்த குழுவில் மெக்கானிக்கல், சிக்னல் ஆப்பரேட்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழு விசாரணை நடத்திய அறிக்கையை சென்னை கோட்ட ரயில்வே துறை அலுவலர்களிடம் சமர்பித்துள்ளனர். அதில், "மின்சார ரயில் சுமார் 15 கி.மீ. வேகத்தில் தான் ரயில் நிலையத்தின் நடைமேடைக்குள் கொண்டு வர வேண்டும். ஆனால், விபத்து நடந்த போது ரயில் ஓட்டுனர் 30 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பிரேக் பழுது ஏற்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விபத்து நடந்த மின்சார ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட் பவித்ரனை சஸ்பெண்ட் செய்து சென்னை கோட்ட ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: என்ன நடந்தது?

Last Updated : May 27, 2022, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.