சென்னை: துபாயில் இருந்து ஃபிளை துபாய் சிறப்பு பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களைச் சோதனையிட்டனர்.
சென்னை மண்ணடியை சேர்ந்த நிஜாமுதீன்(42) என்ற பயணியின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை அலுவலர்கள் பரிசோதித்தனர்.

அவர் என்போா்ஸ்மெண்ட் டைரக்டரேட் எனப்படும் அமலாக்கத் துறையினரால் தேடப்பட்டு வரும் நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து நிஜாமுதீனை அலுவலர்கள் தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அளித்த பதில் அலுவலர்களுக்கு திருப்தியாக இல்லை.

இதையடுத்து அவரை குடியுரிமை அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை : அமைச்சர் கே.என். நேரு