ETV Bharat / state

இருவரை வெட்டிவிட்டு சாதாரணமாக சுற்றும் நபர் - காவல் துறை அலட்சியம்

சென்னை: பெருங்களத்தூரில் இருவரை வெட்டிவிட்டு சுற்றித்திரியும் நபரை காவல் துறையினர் கைது செய்யாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெட்டுப்பட்ட நபர்
வெட்டுப்பட்ட நபர்
author img

By

Published : Jul 14, 2020, 12:48 AM IST

சென்னை பெருங்களத்தூர், பாரதி நகர் பிரதான சாலை, டேனியல் தெருவில் ஸ்டாலின் என்பவர் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது தெருவில் செல்வம் என்பவரது வீட்டின் முன் வாகனங்கள் நிற்கவே தொடர்ந்து ஹாரன் அடித்தாக கூறப்படுகிறது.

செல்வம் வாகனத்தை அப்புறப்படுத்தாமல் ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்டாலினின் கை, கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். அதனை தட்டிக் கேட்க வந்த கிறிஸ்டோபர் என்பவரையும் கன்னத்தில் பலமாக வெட்டினார். பின்னர் இருவரையும் வெட்டி விட்டு அங்கேயே சாதாரனமாக சுற்றி வந்துள்ளார்.

காயமடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் 24 முதல் 25 தையல்கள் போடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பீர்க்கங்கரணை காவல் துறையினருக்கு தெரிந்தும் செல்வத்தை கைது செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் அப்பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 11 குற்றவாளிகள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.